;
Athirady Tamil News

கிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை கடிதம்..!!

0

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான பொது சன நூலகத்தை அதனுடன் சேர்ந்த அலுவலக தொகுதியையையும் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது 1975ம் ஆண்டில் திறக்கப்பட்ட கிளிநொச்சி பொது சன நூலகம் எண்கோண வடிவில் நவீன வசதிகளுடன் காணப்பட்டது

கிளிநொச்சி நகரின் அழகை பிரதிபலிக்க கூடியதாகவும் சமூக அறிவுசார் அடையாளமாகவும் அது திகழ்ந்தது எனினும் தொடர்ச்சியாக கோரிக்கை விடப்பட்டு வருகின்ற போதும் குறித்த நூலகத்தில் இராணுவம் தங்கியிருப்பது பொருத்தமானது அல்ல என குறித்த கடிதத்தில் சுட்டி கட்டியுள்ள கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கிளிநொச்சியில் பல்கலைக்கழகமும் பல் துறை கல்வி நிறுவனங்களும் அதிகரித்துள்ள போதிலும்

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை 25 வது இடத்தில் காணப்படுகிறது என்றும் இதற்கு உசாத்துனை சார் வள நிலையங்கள் போதாமை முக்கியமானது என்றும் இத்தகைய பிரதான நூலகம் இராணுவ வசம் இருப்பதனால் அறிவு சார் அமைவிடமாக திகழக்கூடிய கிளிநொச்சி பொது சன நூலகத்தை மீள நிர்மாணிப்பதில் பாரிய இடர்களை எதிர் நோக்கி வருவதனால் குறித்த நூலகத்தை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 571வது கட்டளை தளபதிக்கு எழுதிய கடிதத்தில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 2 =

*