;
Athirady Tamil News

வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா நகரசபை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பராமரிப்பற்று காணப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களின் உணர்வுடன் அமைக்கப்பட்ட குறித்த நினைவுத்தூபி தற்போது நகரசபைத் தலைவர் இ.கௌதமனின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைக்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் வவுனியா சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவின் பொங்குதமிழ் நினைவுத்தூபியும் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*