;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் 2.4 மில்லியன் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய நபர்: உண்மை சம்பவம்..!!

0

அவுஸ்திரேலியாவில் ரத்த தானம் மூலம் நபர் ஒருவர் இதுவரை 2.4 மில்லியன் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான ஜேம்ஸ் ஹாரிசன்.

இவரே ரத்த தானம் மூலம் கடந்த 60 ஆண்டுகளாக சுமார் 2.4 மில்லியன் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இவரது ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகள் கர்ப்பிணி பெண்களுக்கு வரும் விசித்திர நோய்க்கு அருமருந்தாக உள்ளது.

ஜேம்ஸ் ஹாரிசனின் 14-வது வயதில் இவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அப்போது மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவரது ரத்தத்தில் அரியவகை நோயெதிர்ப்பு சக்தி இருப்பதை கண்டறிந்தனர்.

அவை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் விசித்திர நோயால் பாதிப்புக்கு உள்ளாகி இறக்க நேரிடும் பச்சிளம் குழந்தைகளுக்கு அருமருந்தாக அமையும் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இதனையடுத்து ஜேம்ஸ் ஹாரிசன் தமது 21-வது வயதில் இருந்து இதுவரை ரத்த தானம் செய்து வருகிறார்.

இதனால் அவுஸ்திரேலியாவில் சுமார் 2.4 மில்லியன் பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பியுள்ளன.

இவரது இந்த சேவையை பாராட்டி கடந்த 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசின் உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + ten =

*