;
Athirady Tamil News

தென் மாகாணத்தில் குழந்தைகளை அச்சுறுத்தும் வைரஸ் நோய்..!!

0

தென் மாகாணத்தில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் நோய், தீவிரமான நிமோனியா நிலை என்று காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விஷேட சிறுவர் நல மருத்துவர் அருண டி சில்வா தெரிவித்தார்.

தற்போது இந்த நோய் பரவுவது உச்ச நிலையை அடைந்திருப்பதாகவும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காளை போன்ற பகுதிகளில் இருந்து பல நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசேடமாக 2 -3 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை பிறந்த தினத்தில் இருந்து 03 வயது வரையான குழந்தைகளுக்கு இந்த நோய் கடுமையாக தொற்றுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுகள் தவிர ஏனைய பிரிவுகளிலும் பாரியளவில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது சாதாரண வைரஸால் பரவும் நிமோனியா அல்ல என்றும் இன்புளுவன்சா மற்றும் எட்னோ என்ற வைரஸால் பரவும் தீவிரமான நிமோனியா நோய் என்றும், விஷேடமாக 03 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு விரைவாக தொற்றக் கூடிய கடுமையான நோய் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நோய் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதால் தமது பிள்ளைகளை பாடசாலை மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுமாறு வைத்தியர் அருண டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*