;
Athirady Tamil News

யுத்ததில் உயிரிழந்த மக்களிற்கு இன்று கிளிநொச்சியில் அஞ்சலி..!! (படங்கள்)

0

யுத்ததில் உயிரிழந்த மக்களிற்கு இன்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது

யுத்த்தில் உயிரிழந்த மக்களிற்கு இன்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது. குறித்த அமைப்பின் தலைவரான மு.பா மன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்புாது கிளிநாச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் யுத்த்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விசேட ஆத்மசாந்தி வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது, இவ்வழிபாட்டில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சந்திரகுமார்,
யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இன்றய தினம் நாம் அஞ்சலி செலுத்தினோம். கடந்த வருடங்களை போன்று இன்றய தினமும் நாம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி ஆத்மசாந்தி வழிபாட்டிலும் பங்குகொண்டோம் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*