;
Athirady Tamil News

மண்சரிவினால் ரயில் சேவையில் தாமதம்..!! (படங்கள்)

0

பதுளை கொழும்பு பிரதான புகையிரதப் போக்குவரத்து பாதையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மண்சரிவு காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்படைந்தன.

தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில் இந்த மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் அரை மணிநேரம் தரித்து நின்றது.

ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

தற்போது ரயில் பாதை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*