;
Athirady Tamil News

வனஜீவராசிகள் பிரதி அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு அதிகாரிகளின் தீர்வினை வலியுறுத்தியும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டை கண்டித்தும் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

அம்பேவெல, பட்டிப்பொல, கந்த எல, 30 ஏக்கர் மற்றும் 7ஆம் கட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அம்பேவெல பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு எருமைகளால் தமது பயிர் நிலங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை பாதசாரிகள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் அறிவித்திருந்த போதிலும் உரிய பதில் கிடைக்காமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக குறித்த மாடுகளை பாற் பண்ணைகளுக்கு பிடித்து கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டமொன்று நுவரெலியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதியமைச்சர் குறித்த மாடுகளை விடுவித்துள்ளார். அவ்வாறு விடுவிக்கப்பட்ட மாடுகளால் 7ஆம் கட்டை பிரதேசத்தில் விவசாய நிலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த அமைச்சரின் செயற்பாட்டிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபை உப தலைவர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 6 =

*