மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் கைது..!!

மொனராகலை, சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது அதே வகுப்பில் கற்கும் சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த மாணவன் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சக மாணவர்களுடன் இணைந்து கேலி செய்ததால் கோபமடைந்த மாணவர் ஒருவரே இவ்வாறு சக மாணவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய மாணவனை சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.