;
Athirady Tamil News

கணவரின் வரதட்சணை கொடுமையால் 6 வயது மகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை..!!

0

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள நகப்பால் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாரா. இவர்களுக்கு அமேகா (6) என்ற மகள் இருந்தார்.

நேற்று மாலை பிஜூ வெளியே சென்று இருந்தார். தாரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். பின்னர் மகளுடன் மேல் மாடிக்குசென்றார்.

சற்று நேரத்தில் மேல் மாடியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தாரா வீட்டிற்கு வந்தனர்.

அப்போது மேல் மாடி கதவு பூட்டப்பட்டு இருந்தது . ஜன்னல் வழியாக பார்த்த போது தாராவும், அமேகாவும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். தாரா தனது மகளை கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து பொன்னானி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேல் மாடி கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தீயில் கருகி பிணமாக கிடந்த தாரா, அமேகா ஆகியோர் பிணத்தை கைப்பற்றி அஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாராவின் தந்தை மோகனன் பொன்னானி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 2 வருடமாக எனது மகளுக்கு அவரது கணவர் பிஜூ வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இது தொடர்பாக அடிக்கடி எனது மகள் என்னிடம் புகார் தெரிவித்தார். வரதட்சணை கொடுமை காரணமாக தாரா தனது மகளை கொன்று அவரும் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் என கூறி உள்ளார்.

இது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + eighteen =

*