;
Athirady Tamil News

கோண்டாவில் மக்கள் நலன்பேணுமமைப்பின் கல்விக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

கோண்டாவில் மக்கள் நலன்பேணுமமைப்பின் கல்விக்கான நிதியுதவி ழங்கும் நிகழ்வு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

ஐக்கிய ராச்சிய கோண்டாவில் நலன்புரிச்சங்க நிதி அனுசரணையில், கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விக்கான நிதியுதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்ட மாதாந்த நிதியுதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று 17.05.2018 வியாழக்கிழமை மாலை 03 மணியளவில் கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையின் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் தலைவர் செ.ஜெகபாலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான நிதியுதவிகளை வழங்கி வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேசசபைத்தலைவர் தா.தியாகமூர்த்தி, யாழ்.கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் க.மாணிக்கராஜா, பேராசிரியர் சோ.தேவராஜா, மற்றும் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் செயலாளர் செ.தனுஷன் உதவிபெறும் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*