;
Athirady Tamil News

சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..!! (படங்கள்)

0

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

தாதியர் சேவையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி விசேட விருது ஒன்று சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

தாதியர் சேவையின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*