;
Athirady Tamil News

குளிர்பானம் கொடுத்து திருட்டு: மட்டக்களப்பில் சம்பவம்..!!

0

மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்கள் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, மிக நீண்டகாலமாக இவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் மட்டக்களப்பு, ஊறணிப் பகுதியில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக மட்டு. பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பயனாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

இதே பாணியில் இதற்கு முன்னர் திருட்டு சம்பவங்களுடன் குறித்த சந்தேகநபர்களுக்கு தொடர்பிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தொியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*