;
Athirady Tamil News

பாலியல் தொல்லைக்குள்ளான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுக்கு ரூ.3250 கோடி நஷ்டஈடு..!!

0

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் லேரி நாசர் என்பவர் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக பணிபுரிந்தார். அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அந்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர மிச்சிகன் பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து டாக்டர் லேரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க பல்கலைகழக நிர்வாகம் முன்வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − seventeen =

*