;
Athirady Tamil News

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு வவுனியாவில் சுடரேற்றி அஞசலி செலுத்தப்பட்டது..!! (படங்கள்)

0

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (18) வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தின் பிரதம குரு சிவ சிறி பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

நிகழ்வில் சுட்டிகளில் நெய்விளக்கேற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து இஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ். குமாரசாமி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் மற்றும் மாணிக்கம் ஜெகன் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + nineteen =

*