;
Athirady Tamil News

24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது..!!

0

இரத்மலானை, ரயில்வே வீதியில் விசேட அதிரப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போது ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 24 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்

கைது செய்யப்பட்ட நபர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இன்று (18) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 14 =

*