;
Athirady Tamil News

80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து..!!

0

பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை – பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பவக பகுதியில் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 11 =

*