;
Athirady Tamil News

வவுனியாவில் இராணுவ வீரர்கள் வெற்றி நாள் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

மே 19 இராணுவ வெற்றி நாள் இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று பிற்பகல் 12மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள லெப்டிணன்ட் ஜெனரல் லக்ஸ்மன் கொப்பேகடுவ நினைவு தூபியில் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்னா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ வெற்றி நாள் நிகழ்வில் கொப்பேகடுவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் உயிரிழந்த படையினர், பொதுமக்கள் அனைவருக்காகவும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு உப தவிசாளர்; வசந்தகுமார், உறுப்பினர் சானுரா, தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துசாரா மற்றும் சகல கட்சி உறுப்பினர்களும் இனமத பேதமின்றி பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*