பென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து இளம்பெண் பலி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த வேனை லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.
ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த அவர்கள் பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.
அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம்- மேச்சேரி செல்லும் சாலை சின்னம்பள்ளி அருகே உள்ள வளைவு பாதையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கட்டுபாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சோபனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உறவினர்களான 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான சோபனா உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.