;
Athirady Tamil News

வவுனியாவில் வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் வட மாகாண பொலிஸ் விளையாட்டு விழாவானது வவுனியா நகரசபை மைதானத்தில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விளையாட்டுப் போட்டியில் வட மாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் அறிவுறுத்தலின் பேரில், வவுனியாவில் 17 ஆம் மற்றும் 19 ஆம் திகதியில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழா வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் வடமாகாணத்தை சேர்ந்த ஆறு பொலிஸ் பிரிவினரின் அணிவகுப்பு மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பொலிஸ் உத்தியோகத்தார்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 19 =

*