;
Athirady Tamil News

காணாமல் போயிருந்த சீனப் பிரஜை உயிருடன் மீட்பு..!!

0

காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட சீனப் பிரஜை ஒருவர் குழி ஒன்றிலிருந்து 9 நாட்களுக்கு பின்னர் இன்று (சனிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டார்.

அம்பாந்தோட்டை – மாத்தறை அதிவேக வீதியின் அமைப்புக்காக சீனாவிலிருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

காணாமற்போயிருந்த குறித்த சீனரைத் தேடும் பணியில் தியகொட பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதேச வாசிகளின் தகவலுக்கமைய மாத்தறை தியகொட பிரதேசத்தின் தியகொட மலையில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

அதன் பின்னர் பொலிஸார் அவரை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் 9 நாட்கள் இவர் எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் இன்று மீட்கப்பட்டமையானது ஆச்சரியபடவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 20 =

*