;
Athirady Tamil News

ஹட்டன், களனிவத்தை பகுதியில் தனியார் பேருந்து விபத்து..!!! (படங்கள்)

0

ஹட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தின் போது 6 சிறுவர்கள், 4 ஆண்கள் உட்பட 10 பேர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்தானது சாரதியின் கவனயீனம் காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*