;
Athirady Tamil News

தமிழகத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!! (படங்கள்)

0

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த மக்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் இராமேஸ்வரத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்றுகூடல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படத்தைத் தாங்கிய படகொன்று தயாரிக்கப்பட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் சுடரேற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் நோக்கி மிதக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கூடிய மக்கள் வானத்தை நோக்கித் தமது கைத்தொலைபேசியில் விளக்குகளை ஒளிரவிட்டு அகவணக்கம் செலுத்தியதுடன், கடலில் பூக்களைத் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*