;
Athirady Tamil News

7 வயது மகனுடன் மாடியிலிருந்து குதித்த பிளேபாய் முன்னாள் மொடல்..!!

0

அமெரிக்காவில் பிளேபாய் இதழின் முன்னாள் மொடல் Stephanie Adams, தனது 7 வயது மகனுடன் ஹொட்டலின் 25வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல மாத இதழான பிளேபாயின் மொடலாக Stephanie Adams(46). இவர், தனது கணவர் சார்லஸ் நிக்கோலாய், மகன் Vincent(7) உடன் Manhattan ஹொட்டலின் 25வது மாடியில் வசித்து வந்தார்.

Stephanie Adams-க்கு தனது கணவர் சார்லஸ் நிக்கோலாயுடன் விவாகரத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் வசித்து வந்த 25வது மாடியில் இருந்து தனது மகனுடன் சேர்ந்து குதித்துள்ளார். இதில் 23வது மாடியில் விழுந்து அவர் தனது மகனுடன் இறந்துள்ளார்.

ஆனால், இது கொலையா அல்லது தற்கொலையா என்கிற குழப்பத்தில் பொலிசார் உள்ள நிலையில், இது தொடர்பாக ஹொட்டல் நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சார்லஸ் நிக்கோலாயின் வழக்கறிஞர் கூறுகையில், ‘சார்லஸ் நிக்கோலாய் அவருடன் 20 ஆண்டுகள் நண்பராக இருந்தார். ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

சமீபத்தில் அவர் நிக்கோலாயிடம் தெரிவித்தபோது, Stephanie தன் காதலுடன் இருக்க ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பினார். அது ஒரு பிரச்சனை. Stephanie-க்கு சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால், மனசோர்வு அவருக்கு ஒன்றும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Stephanie Adams இரண்டு வணிக பட்டங்களை பெற்றிருந்தார். பல சுய உதவி புத்தகங்களை எழுதியுள்ள அவர், ஒன்லைன் அழகு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*