;
Athirady Tamil News

பிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..!!

0

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் தெரி­வித்­துள்­ளார்.

‘அவர் (தலை­வர் பிர­பா­க­ரன்) இறந்­த­தன் பின்­னர் அத­னைக் கொண்டு நடத்­து­வ­தற்­கான ஆள்­களை அவர் அதற்­கேற்­ற­ மா­திரி வைத்­தி­ருந்­தாரோ அது எனக்­குத் தெரி­ய­வில்லை’ என்று விக்­னேஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார்.

நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர், பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்து விட்­டார் என்று தெரி­வித்­தி­ருந்­தார். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் அதே­போன்­ற­தொரு கருத்தை முன்­வைத்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அந்த நேர்­கா­ண­லில் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அவர் (தலை­வர் பிர­பா­க­ரன்) ஒரு சிறந்த போராளி என்­பதை சரத் பொன்­சேகா கூட கூறி­யி­ருக்­கி­றார். தீவி­ரப் போராளி என்­றால் ஒரு விட­யத்தை தீவி­ர­மாக பற்­றிக் கொண்­டார். அதா­வது தனி­நாடு மட்­டும் தேவை. வேறு எது­வும் தேவை­யில்லை என்று கூறி­ய­த­னால், இலங்­கை­யின் பல அர­சு­கள் அதை வேறுவித­மாக கருத்­தில் எடுத்து எமக்கு எதி­ராக நடந்து கொண்­டன. அவரை மாவீ­ரன் என்­ப­திலோ, தீவிர போராளி என்­ப­திலோ எந்­த­வி­த­மான பிழை­யும் இல்லை.

அர­சி­யல் ரீதி­யாக அவ­ரது இடம் எங்கு இருக்­கி­றது என்­றால், தனி­நாடு மட்­டும் தான் தேவை. அந்த ஒரு விட­யத்­தில் அவர் பற்­று­தி­யோடு இருந்­தார். இத­னால் வேறு எத­னை­யும் செய்­யக்­கூ­டிய அல்­லது வேறு எத­னை­யும் பெற்­றுக் ­கொள்­ளக்­கூ­டிய நிலை எங்­க­ளுக்கு ஏற்­ப­ட­வில்லை.

அத­னு­டன், அவர் இறந்­தன் பின்­னர் அத­னைக் கொண்டு நடத்­து­வ­தற்­கான ஆள்­களை அவர் அதற்­கேற்ற மாதிரி வைத்­தி­ருந்­தாரோ அது எனக்கு தெரி­ய­வில்லை. ஆனால் அதற்­குப் பின்­னர், பல ஆண்­டு­கள் கடந்­த­தன் பின்­னர்­தான் ஜன­நா­யக ரீதி­யாக நாங்­கள் இதற்­குள் நுழைந்­தோம்.

அப்­பொ­ழுது எங்­க­ளுக்கு தரப்­பட்ட தேர்­தல் அறிக்­கை­யில் எதைக் கூயி­ருந்­தார்­களோ, எங்­கள் மக்­கள் மக்­கள் தலை­வர்­கள் இணைந்து எடுத்­தி­ருந்­தார்­களோ அதற்­க­மை­வா­கவே நாங்­கள் இது­வ­ரை­யில் செய்­து­ வ­ரு­கி­றோம். அதற்கு முன்­னர் குறிப்­பிட்­ட­தற்­கும் வித்­தி­யா­சம் இருப்­ப­தா­கத் ­தான் அதை ஒரு­வி­த­மாக விமர்­சித்­தி­ருக்­கி­றேன் என்று முத­ல­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

‘நீங்­கள் ஒரு உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக இருந்­துள்­ளீர்­கள். இப்­பொ­ழுது பேசும் போது அவர் இறந்­து­ விட்­டார் என்று கூறி­யுள்­ளீர்­கள். இதனை உறு­திப்­ப­டுத்த முடி­யுமா’ என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், “இறந்­து­ விட்­டார் என்று நான் சர்வ சாதா­ர­ண­மாக கூறி­விட்­டேன். அது என்­னால் உறு­திப்­ப­டுத்த முடி­யாது. ஏனென்­றால் நெடு­மா­றன் இப்­பொ­ழு­தும் கூறு­கி­றார், அவர் உயி­ரு­டன் இருப்­ப­தாக.. பொது­வாக மக்­கள் அவர் இறந்­து­ விட்­டார் என்று கூறி­ய­தன் அடிப்­ப­டை­யில் அதைப்­பற்றி நான் யோசிக்­கா­மல் கூறி­விட்­டேன்”.

“அவர் இருக்­கின்­றாரா? இல்­லையா? என்று கேட்­டால்.. எனக்­குத் தெரி­யாது என்­ப­து ­தான் என்­னு­டைய பதில்.

“ஒரு போராளி, மக்­க­ளு­டைய இத­யத்தை வென்­ற­வர், உயி­ரு­டன் இருக்­கி­றார் என்­பதை சிறப்­பாக கரு­து­வீர்­களா? அவர் இறந்­து ­விட்­டார் என்­பதை சிறப்­பாக கரு­து­வீர்­களா ? நீங்­களே சொல்­லுங்­கள்” என்­றும் கேள்வி எழுப்­பி­னார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 4 =

*