;
Athirady Tamil News

தூக்கி வீசப்பட்ட சாரதி மீது குவிந்தது மணல் – மூச்சத் திணறி உயிரிழந்த சோகச் சம்பவம்..!!

0

மண் ஏற்­றிச் சென்ற டிப்­பர் தடம்­பு­ரண்­ட­போது தூக்கி வீசப்­பட்ட சார­தி­யின் மீது மணல் குவிந்­த­தால் அவர் மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழந்­தார். அவ­ரு­டன் பய­ணித்­த­வர் காய­ம­டைந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

முள்­ளி­ய­வளை – நெடுங்­கேணி வீதி­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு சம்­ப­வம் இடம்­பெற்­றது. வவு­னியா கல்­மடு பகு­தி­யைச் சேர்ந்த விவே­கா­னந்­த­ராசா றொபின்­சன் (வயது -28) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். முல்­லைத்­தீவு கூழா­மு­றிப்­பைச் சேர்ந்த செல்­வக்­கு­மார் தர்­சன் (வயது – 24) என்ற இளை­ஞன் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

டிப்­பர் முள்­ளி­ய­வ­ளை­யி­லி­ருந்து வுனியா நோக்கி மண் ஏற்­றிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது, களிக்­காட்­டுப்­ப­கு­தி­யில் வீதி­யின் குறுக்கே நின்ற மாட்­டு­டன் மோதா­மல் வில­கிச்­செல்ல முற்­பட்­ட­போது வாக­னம் தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­ன­தாக ஆரம்ப விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­போதே சாரதி தூக்கி வீசப்­பட அவர் மீது டிப்­ப­ரில் இருந்த மண் கொட்­டப்­பட்டு மூச்­சுத் திணறி அவர் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டது.

முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸார் சார­தி­யின் உடலை மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். காய­ம­டைந்த உத­வி­யா­ளர் மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கி­றார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + twenty =

*