;
Athirady Tamil News

சொந்த சகோதரியை கௌரவக் கொலை செய்த நபர்: வெளியான காரணம்..!!

0

பாகிஸ்தானில் நபர் ஒருவர் தமது சொந்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டு கௌரவக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் முறைதவறி காதலித்து வந்துள்ளதாகவும் இதனாலையே கொலை செய்துள்ளதாகவும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதான தமது சகோதரி நெருங்கிய உறவினரான 20 வயது இளைஞரை காதலித்து வந்தது குடும்பத்தில் பிரச்னையை கிளப்பியதாகவும்,

இதன் காரணமாகவே கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குற்றவாளியின் தந்தையும் தூரத்து உறவினர் ஒருவரும் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கௌரவக் கொலை என்பது பாகிஸ்தானின் 4 முக்கிய மாகாணங்களான சிந்து, பஞ்சாப், பலூசிஸ்தான் மற்றும் கைபர் பாக்தூன்குவா பகுதிகளில் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது.

கடந்த 9 மாதங்களில் மட்டும் சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் பகுதியில் 8 கௌரவக் கொலைகள் பதிவாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது

2017 ஜூலை முதல் இதுவரை கௌரவக் கொலைகள், குடும்ப தகராறு, பிள்ளைகளை விட்டுத்தருவதில் பிரச்னை என சுமார் 1,643 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*