;
Athirady Tamil News

வான் கதவுகள் திறப்பு – மண்சரிவுகள் – மழையுடன் கூடிய பனி மூட்டம்..!!

0

மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மைலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (21) அதிகாலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்திலும் நீர் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொசல்கமுவ ஓயா, டிக்கோயா ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதுடன் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் அதிகளவில் நீர் வழிந்தோடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மழையுடன் கூடிய பனி மூட்டம் நிறைந்த காலநிலையில் ஹட்டன் கொழும்பு வீதியில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதான பாதைகளில் மழை நீர் அடித்துச் செல்வதனால் பாதையில் வலுக்கல் தன்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அதிக மழையினால் நீரேந்தும் பகுதிகளில் குடியிருப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 14 =

*