;
Athirady Tamil News

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

0

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களைப்பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும் ,மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இனமதபேதமின்றி இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக வழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*