;
Athirady Tamil News

இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது..!! (படங்கள்)

0

தேசிய வீடமைப்ப அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறிதத் திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு 25 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. குறி்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 25 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சிமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 200 பேருக்கு தொழில் உபகரணங்களும், 800 பேருக்கு 50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 11 =

*