;
Athirady Tamil News

மண்சரிவினால் ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை..!!

0

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டயினால் அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்படுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (21) அதிகாலை முதல் பெய்து வரும் மழையில் கினிகத்தேன தியகலை பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மணிக்கப்படும் மண்மேடு பகுதி சரிந்து விழ்ந்துள்ளது.

இதனால் மதியம் 1.30 மணிமுதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி, தலவாகக்லை, கலுகல மற்றும் லக்ஷபான வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மேலும் பாதை அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மண்சரிவை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 11 =

*