;
Athirady Tamil News

குளக்கட்டில் குப்பைகள் வீசுவது அதிகரிப்பு கோழி இறைச்சி வியாபார நிலைய உரிமையாளரே காரணம்..!! (படங்கள்)

0

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோழி இறைச்சியின் எச்சங்கள் ஒரு பையினுள்போடப்பட்டு வீசப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியினால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், அதிகாரிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசிவருகின்றது நேற்று வைரவப்புளியங்குளம் பகுதியில் கோழி இறைச்சி வியாபார நிலையம் வைத்திருக்கும் ஒருவரே இவ்வாறு தனது வியாபார நிலையத்தில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழியின் எச்சங்களை வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சென்று கேட்டபோது நேற்று மாலை குளக்கட்டுப்பகுதியில் வீசப்பட்ட கோழி எச்சங்களை அகற்றித்தருவதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இன்று காலை வரை அதனை அகற்றவில்லை இதையடுத்து இவ்விடயத்தை நகரசபையினருக்கு முறையிட்டுள்ளதாகவும் இதற்கு உடனடியாகதீர்வினைப் பெற்றுத்தருமாறும் அப்பகுதியிலுள்ள இளைஞர் வழிப்புணர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவ்வாறு குளக்கட்டுப்பகுதியிகளில் பொதுமக்கள் தமது வீட்டுக்கழிவுகளையும் குப்பைகளையும் வீசி வந்துள்ளதாகவும் எனினும் இச் செயற்பாடுகள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் கோழி இறைச்சி வியாபார நிலையத்திலிருந்து நேற்று அப்பகுதியில் பெருமளவான கோழி இறைச்சியின் எச்சங்கள் பொதி செய்யப்பட்டு வீசிவிட்டுச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் வழிப்புணர்வுக்குழுவினர் வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள கோழி இறைச்சி வியாபார நிலையத்திற்குச் சென்று குளக்கட்டுப்பகுதியில் வீசப்பட்ட கோழியின் எச்சங்கள் தொடர்பாக வினவியபோது தனது நிலையத்திலிருந்து வீசப்பட்டுள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இன்று காலை வரையில் அக்கழிவுகள் குளத்திலிருந்து அப்புறப்படுத்த்படவில்லை இதையடுத்து இவ்விடயத்தினை நகரசபையினருக்கு முறையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கோழி இறைச்சி விற்பனை செய்யும் உரிமையாளர்கள் தமது நிலையத்திலிருந்து விற்பனைக்காக வெட்டப்படும் இறைச்சியின் எச்சங்களை குளத்தில் வீசுவதற்கு குளம் மாசுபடுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fifteen =

*