;
Athirady Tamil News

ரூ.15 கோடி சொகுசு மாளிகையில் குடியேறுகிறார் மாயாவதி..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தற்போது உள்ள அரசு பங்களாவிலிருந்து, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவிற்கு குடியேற உள்ளார்.

உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்-மந்திரிகள் 6 பேர் அரசு மாளிகையிலிருந்து 15 நாட்களில் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் சென்ற வாரம் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மாயாவதி 2010-ம் ஆண்டில் வாங்கிய புதிய பங்களாவிற்கு மாற வேண்டும் என தனது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் விரைவில் அங்கு குடியேற உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முலாயம் சிங் யாதவ் உட்பட பல தலைவர்கள் தங்கள் அரசு இருப்பிடங்களை காலி செய்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 7 =

*