;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு..!! (படங்கள்)

0

தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை விழையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நாடுபூராவும் நடைபெற்றுவரும் தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு 21 ஆம் திகதியிலிருந்து 25 ஆம்’ திகதிவரை இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்களுக்கிடையில் கரப்பந்தாட்ட நிகழ்வுகளும், பெண்களுக்க வலைப்பந்தாட்ட நிகழ்வுகளும் வவுனியா மாவட்ட செயலகத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*