;
Athirady Tamil News

பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

பசுக்கள் வதை செய்யப்படுவது மற்றும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராக தென்மராட்சி பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தன.

குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் இன்று காலை 10மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் ஆரம்பித்து நகரசபையை சென்றடைந்தது.

பசுக்களை வதைக்காதே, இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதை தடை செய், இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடு போன்ற கோசங்களை கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர்.

இதன்போது, சாவகச்சேரி பிரதேச செயலருக்கும், நகராட்சி மன்றத் தவிசாளருக்கும் பசு வதைக்கு எதிராகவும் இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கோரியும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கருத்து தெரிவித்த சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன்,

பசு வதைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராடுவதைப் போல புனித தினங்களில் மதுபானம் விற்பனை செய்தல் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

தென்மராட்சியில் போதைப்பொருள் கடத்தல்கள் சட்டவிரோத மதுபான விற்பனைகள் புனித தினங்களில் மதுபான விற்பனை போன்றன இடம்பெற்று வருகின்றன. இவற்றிற்கு எதிராகவும் இந்த அமைப்புக்கள் போராட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நகராட்சி மன்றத்தினரும் தமது பங்களிப்பை வழங்க முடியும்.

மேலும், யாராவது பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அது தொடர்பில் எமக்கு முறையிட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி பசுவதைக்கு எதிராக நகராட்சி மன்றமும் குரல் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*