;
Athirady Tamil News

பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்தே கொல்லப்பட்ட பாடசாலை மாணவி: கதறும் குடும்பம்..!!

0

அயர்லாந்தில் பாடசாலை மாணவியை இளைஞர்கள் கும்பல் ஒன்று கொடூரமாக பலாத்காரத்துக்கு உட்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டப்ளின் நகரில் உள்ள லூகன் கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.கடந்த திங்களன்று இப்பகுதியில் குடியிருக்கும் Anastasia Kriegel என்ற 14 வயது பாடசாலை மாணவி மாயாமானார்.

தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதன் பின்னர் அவர் குடியிருப்பில் இருந்து வெளியேறினார் எனவும், அதனையடுத்து அவர் குடியிருப்புக்கு திரும்பவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வியாழனன்று மதியம் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து மாணவி அனஸ்தேசியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது

இதனையடுத்து நடத்தப்பட்ட உடற்கூறு சோதனையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியானது. மாணவி அனஸ்தேசியா ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி அவரது பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டுள்ளது.

மேலும் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளனர். மட்டுமின்றி கல்லால் அடித்துள்ளனர். உடம்பு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.

இந்த நிலையில் விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள், பாலியல் நோக்கம் மட்டுமே சிறுமி கொலை காரணமாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*