;
Athirady Tamil News

மது போதையில் விபத்து: 2 சிறார்கள் பலி..!!

0

பிரான்ஸில் டிராக்டர் வாகனம் இரண்டு சிறார்கள் மீது மோதியதில் இருவருமே உயிரிழந்துள்ளனர்.Montbazens பகுதியில் தான் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

ஏட்டு வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் சேர்ந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் வந்த டிராக்டர், சைக்கிளின் மீது மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுனர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*