;
Athirady Tamil News

தேநிலவை தள்ளிப்போடும் இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதி: வெளியான தகவல்..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதியினரின் காதல் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் தங்களின் எதிர்கால திட்டம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

Frogmore இல்லத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதியினருக்கு அசத்தலான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இருவரும் தங்களின் அடுத்தகட்ட திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் டோங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்

மேலும் தேநிலவு கொண்டாட்டங்களை தள்ளிப்போடும் திட்டமும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதன் காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பெரும்பாலும் நமீபியா அல்லது போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் ஒன்றில் ஹரி மெர்க்கல் தம்பதி தேநிலவுக்கு செல்லலாம்.

கோடைகால துவக்கத்தில் டப்ளினில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு புதுமணதம்பதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் ஆண்டின் இரண்டாவது பாதியில் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதிகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் மற்றும் அது தொடர்பான வேலைகள் இருக்கும் என செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Frogmore இல்லத்தில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 2 =

*