;
Athirady Tamil News

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906..!!

0

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 – வியன்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன. * 1834 – இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. * 1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடு கடத்துதல் நிறுத்தப்பட்டது. * 1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. * 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். * 1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.

* 1915 – ஸ்காட்லாந்தில் ஐந்து ரெயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர். * 1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிகோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது. * 1958- இலங்கை இனக்கலவரம்- இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். * 1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். * 1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். * 1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.

* 1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது. * 1990 – வடக்கு ஏமன் மற்றும் தெற்கு ஏமன் ஆகியன இணைந்து ஏமன் குடியரசு ஆகியது. * 1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. * 2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + five =

*