;
Athirady Tamil News

சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிப்பு..!! (படங்கள்)

0

சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிப்பு, காணியை வழங்கிய உரிமையாளர்களுக்கு மக்கள் உருக்கமான நன்றி தெரிவிப்பு

கிளிநொச்சி பன்னங்கண்டி சிவாபசுபதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த காணிகளை அவர்களுக்கு சொந்தமாகவே காணி உரிமையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் நான்காம் திகதி பன்னங்கண்டி சிவாபசுவதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் குடியிருந்த வந்த மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதிபத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

காணி உரிமையாளார்களான இலங்கையின் முன்னாள் சட்டாமா அதிபராக இருந்த சிவாபசுபதியும் அவர்களது சகோதரர்களும். இவர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் கிளிநொச்சி காவேரி கலா மன்றத்திற்கு வருகை தந்திருந்த போது இந்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் அருட்தந்தை கலாந்தி ரி.யோசுவா அவர்களினால் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது அவர் தனது உறவினர்களுடன் பேசி குறித்த காணியை குடியிருக்கும் மக்களுக்கே வழங்குவதற்கு தீர்மானித்திருந்தனர்.

இதற்கு பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை சிவாபசுபதி கமம் உரிமைாளர்களின் விருத்திற்கு அமைவாக யோகர் சுவாமிகள் குடியிருப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு காணி ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

காணி உரிமையாளர்களான மருத்துவர் மாலதிவரன் உள்ளிட்ட உறவினர்கள், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், அருட்தந்தை யோசுவா, மாகாண மேலதிக காணி பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்கி வைத்தனர்.

பெறுமதியான காணியினை உவந்தளித்து தங்களின் வாழ்நாளில் முதல்முறையாக சொந்தமாக காணி ஒன்றை வழங்கிய உரிமையாளர்களுக்கு பிரதேச பொது மக்கள் உருக்கமாக தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 6 =

*