;
Athirady Tamil News

ஐபிஎல் பைனல்ஸ் முதலில் நுழைவது யார்…. சிஎஸ்கேவா, ஹைதராபாத்தா..!!

0

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் முன்னேறும் நேரடி வாய்பை அளிக்கும் பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது. இதில் இந்த சீசனில் மிகவும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்குகின்றது.

லீக் ஆட்டங்களில் 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தையும், 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று இரவு மும்பையில் நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனல்ஸ் முன்னேறும். தோல்வி பெறும் அணி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன், 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் மீண்டும் விளையாடும்.

சிஎஸ்கே அபாரம் சிஎஸ்கே அணி இந்த சீசனையும் சேர்த்து தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் முன்னேறியுள்ளது. இந்த சாதனையை புரிந்துள்ள ஒரே அணி சிஎஸ்கேதான். இதுவரை 8 சீசன்களில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. 4 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2 முறை மட்டுமே பைனல்ஸ் வாய்ப்பை இழந்தது.

சரியான போட்டி இந்த சீசனில் மிகவும் வலுவான பேட்டிங்கை கொண்டதாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் மிகவும் வலுவான பவுலிங் வரிசையை ஹைதராபாத் கொண்டுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை மோதிய இரண்டு ஆட்டங்களிலுமே சிஎஸ்கேதான் வென்றுள்ளது. சமாளிக்குமா ஹைதராபாத் சீசனின் துவக்கம் முதல் எவ்வித அதிரடி, பரபரப்பு இல்லாமல் தொடர்ந்து வெற்றிகளை ஹைதராபாத் குவித்து வந்தது. ஆனால், கடைசியாக நடந்த மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது.

அதனால் சிஎஸ்கேவை வெற்றி பெற வேண்டும் என்ற மிகப் பெரிய சவாலுடன் ஹைதராபாத் இன்று களமிறங்குகிறது. நேரடி பைனல்ஸ் வாய்ப்பு மும்பையில் இரவு 7 மணிக்கு துவங்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வென்றால், நேரடியாக பைனல்ஸ் நுழையலாம். மீண்டும் கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக உள்ளதால், யார் முதலில் பைனல்ஸ் நுழையப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eleven =

*