;
Athirady Tamil News

வடமாகாணசபை உறுப்பினரால் 40 குடுமபங்களிற்கு வாழ்வாதார உதவிவழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வடக்குமான சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வறுமை கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாசபை உறுப்பினர் தியாகராசாவின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான 868000 ரூபா மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்ட்ட குடும்பங்கள், பெண் தலைமைக் குடும்பங்கள், மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த 40 பேருக்கு சைக்கிள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வல் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்,பிரதேச சபை உறுப்பினர்களான,சிவராஜா, ரமணி மற்றும் தொழில்திணைக்கள மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 12 =

*