;
Athirady Tamil News

பளை சக்தி கல்விநிறுவன ஆண்டுவிழாவும், பரிசளிப்பு விழாவும்..!! (படங்கள்)

0

பளை சக்தி கல்வி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நிறுவன இயக்குநர் வ.சாந்தகுமார் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கௌரவ விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேனும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொண்ட கலைநிகழ்ச்சிகள், மக்களுக்குத் தேவையான சிறந்த கருத்துக்களை வழங்குவது சினிமாவா? இலக்கியமா? என்ற பொருளில் அமைந்த சிறப்புப் பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*