;
Athirady Tamil News

உலகமெங்கும் பெருகும் பில்லியனர்கள் எண்ணிக்கை: எந்த நாட்டில் அதிகம்?..!!

0

சர்வதேச அளவில் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டின் ஆய்வுகளின் அடிப்படையில் உலகமெங்கும் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 2,754 என தெரிய வந்துள்ளது.

பில்லியனர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல கடந்த ஆண்டில் அவர்களது சொத்து மதிப்பும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 9.2 ட்ரில்லியன் டொலர் சொத்துக்களை குறித்த பெரும் செல்வந்தர்கள் கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும் 24 விழுக்காடு அதிகமாகும்.

சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் சுமார் 25 விழுக்காடு அமெரிக்க நாட்டவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 680 பேர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.2 ட்ரில்லியன் டொலராகும்.

சீனாவில் மொத்தம் 338 பில்லியனர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக உலகின் சரிபாதி வளத்தை இந்த ஒரு விழுக்காடு பில்லியனர்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 14 =

*