;
Athirady Tamil News

அமெரிக்காவில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் பாடசாலை மாணாக்கர்கள்: வெளியான தகவல்..!!

0

அமெரிக்காவில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை விட துப்பாக்கி கலாச்சாரத்தால் கொல்லப்படும் பாடசாலை மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகம் என ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்
ஆண்டு பிறந்தது முதல் இதுவரை தேச பாதுகாப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர் மொத்தம் 13 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இதுவரை 29 பாடசாலை மாணாக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கடந்த 17 ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு பெருமளவு மாணாக்கர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 2000 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சுமார் 36 பாடசாலை மாணாக்கர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி இந்த ஆண்டில் இதுவரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் 16 முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் ராணுவத்தினர் தொடர்பில் இதுவரை 7 சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதுவும் ஹெலிகொப்டர் விபத்து போன்றவை

டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Santa Fe மேநிலை பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலை மாணவனான Dimitrios Pagourtzis தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

இதில் 10 மாணாக்கர்கள் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர். கடந்த காதலர் தினத்தன்று பிளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Marjory Stoneman Douglas மேநிலை பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*