;
Athirady Tamil News

சூப்பர் ஹீரோ உடையணிந்த நபரை கைது செய்த சுவிஸ் பொலிஸ்..!!

0

சுவிட்சர்லாந்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ‘Deadpool’-யின் உடையணிந்திருந்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

காமிக்ஸ் கதைகளில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ‘Deadpool’. இந்த கதாபாத்திரத்தை வைத்து ’Deadpool’ என்ற பெயரிலேயே திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘Deadpool-2′ எனும் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. இதனைக் காண Deadpool கதாபாத்திரத்தின் உடையில் நபர் ஒருவர் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட சுவிஸ் பொலிஸார், குறித்த நபரையும் அவரது நண்பரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர். பின்பு அவர்களை கைது செய்தனர்.

முகத்தை மறைப்பது போன்ற உடைகள் அணிவது குற்றம் என்ற வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு சுவிஸில் சட்டம் இயற்றப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே Deadpool உடையணிந்திருந்த நபர், தனது முகத்தை முகமூடி கொண்டு மறைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் Alessandro Botta-வும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து Botta கூறுகையில், ‘இந்த உடையணிந்திருந்த நண்பருடன் நான் திரைப்படத்திற்கு செல்ல நினைத்தேன். அவர் ஏற்கனவே முகமூடி அணிந்திருந்தார். ஆனால், இது எங்களுக்கு பிரச்சனையா என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை.

ஆரம்பத்தில் பொலிசார் எங்களை கைது செய்தபோது நாங்கள் பதற்றமடைந்தோம். அதன் பின்னர் நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை உணர்ந்த அவர்கள் சிரித்துவிட்டனர். எனினும், விதிமீறலுக்காக எனது நண்பர் அபராதத்தை செலுத்தினார்’ என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் கேலி செய்யும் விதமாக முகமூடி ஒன்றை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி, ‘இதை நீங்கள் அணிந்திருந்தால் கைது செய்யப்பட மாட்டீர்கள்’ என்று பதிவிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 6 =

*