;
Athirady Tamil News

உயிர் தோழியின் காதலனை திருமணம் செய்து கொண்ட பெண்: துரோகத்தால் துடித்து போன தோழி..!!

0

கென்யாவில் நெருங்கிய தோழியின் காதலனை பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஷிகோவும், மார்கேரேட்டும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.இந்நிலையில் ஷிகோ, ரிச்சு என்ற இளைஞரை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இதையடுத்து ரிச்சுவை தனது உயிர் தோழி மார்கேரேட்டுக்கு ஷிகோ அறிமுகம் செய்துள்ளார்.

பின்னர் ரிச்சுவும், மார்கேரேட்டும் நெருங்கிய நண்பர்களான நிலையில் அது காதலாக மாறியுள்ளது.இது ஷிகோவுக்கு தெரியவந்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆனால் அதை பொருட்படுத்தாத ரிச்சுவும், மார்கேரேட்டும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.இதையடுத்து தனது உயிர் தோழியே தனக்கு துரோகம் செய்து விட்டார் என மனம் கலங்கிய ஷிகோ, மாகேரேட்டுடனான நட்பை முறித்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 16 =

*