;
Athirady Tamil News

பொலிஸாரின் அறிவுரையை மீறி வௌ்ளநீரில் சென்ற நபருக்க நேர்ந்த நிலை..!!

0

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பே பிரதேசத்தில் பாதையின் குறுக்காக வடிந்தோடிக் கொண்டிருக்கும் வௌ்ளநீர் மீது பயணிக்க வேண்டாம் என்று பொலிஸார் தெரிவித்த போதிலும் அதனை கருத்திற் கொள்ளாது குறித்த நபர் சென்றுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து அந்த நபர் வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸாரும் பிரதேச இளைஞர்களும் இணைந்து அந்த நபரை காப்பாற்றிய போதிலும், வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்க முடியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 3 =

*