;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதை மூடப்பட்டது: ஜேர்மன் பேருந்து தீப்பற்றியதால் பாதிப்பு..!!

0

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள San Bernardino சுரங்கப்பாதை குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரையில் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு சுவிட்சர்லாந்தின் முக்கிய சுரங்கப்பாதையில் ஜேர்மன் பேருந்து ஒன்று தீப்பற்றியதால் அப்பகுதியில் ஏற்பட்ட மோசமான போக்குவரத்து நெரிசலையடுத்து அந்த சுரங்கப்பாதை மூடப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை வடக்கு மற்றும் தெற்கு சுவிட்சர்லாந்தை இணைக்கும் பாதையின் மாற்றுப்பாதையாகும்.

அதேபோல் இந்த சுரங்கப்பாதை ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் தெற்கு நோக்கி பயணிக்கும் முக்கிய பாதைகளில் ஒன்றாகும். சுரங்கப்பாதை மூடப்பட்டதால் அதன் வடக்கு நுழைவாயிலில் 28 கிலோமீற்றர்கள் தொலைவிற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

சுரங்கப்பாதை மூடப்பட்டதையடுத்து மேலும் போக்குவரத்தில் பாதிப்புகளும் நெரிசல்களும் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக சுவிஸ் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

22 பயணிகளுடன் சென்ற ஜேர்மன் பேருந்து ஒன்று சுரங்கப்பாதை முடிவடைவதற்கு 500 மீற்றர்கள் முன்பு தீப்பற்றியது.

பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர்.

யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் இல்லை. புகையை சுவாசித்த இருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*