;
Athirady Tamil News

கனடாவில் பல மில்லியன் தேனீக்கள் உயிரிழப்பு: பழங்கள் உற்பத்தியும் பாதிக்கும் என தகவல்..!!

0

கனடாவில் பாதகமான சீதோஷ்ணமும் தேனீக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுண்ணித் தாக்குதலும் இணைந்து பல மில்லியன் தேனீக்களின் உயிரைப் பறித்துள்ளன.

இதனால் தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பழங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

Quebecஇன் கிராமப்புரத்தில் வசிக்கும் ஸ்டீபன் கிராபோர்டு என்பவர், தேன் உற்பத்தி தொடங்கவிருக்கும் சமயத்தில் சுமார் எட்டு மில்லியன் தேனீக்களை சாகக் கொடுத்துள்ளார்.

முன்பு என்னிடம் 150 தேன் கூடுகள் இருந்தன. இப்போது 20 தேன் கூடுகளாவது மிஞ்சுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர். Varroa destructor என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணிகள்தான் தேனீக்கள் இறக்கக் காரணம் என்கிறார் ஸ்டீபன்.

இந்த ஒட்டுண்ணிகள் வளர்ந்த தேனீக்களின் முதுகில் அமர்ந்து அவற்றின் உடலிலுள்ள திரவங்களை உறிஞ்சிக் குடிக்கின்றன. பின்னர் அவை கூடுகளில் வளரும் தேனீக்களின் லார்வாக்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மொத்த தேனீக்களின் காலணியும் அழிந்துபோகும்

ஒண்டாரியோவில் 70 சதவிகிதம் தேனீ வளர்ப்பவர்கள் பெருமளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரக் கணக்கு ஒன்று தெரிவிக்கிறது

பாதிக்கப்பட்டவர்கள் அரசின் உதவியைக் கோரியுள்ளார்கள். மக்கள் நஷ்டப்படுவது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தேனீக்களின் உயிரிழப்பினால் பழ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

பழங்கள் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு மிகப்பெரியது, அதாவது பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றால்தான் காய்கள் உருவாகும்.

மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பவை தேனீக்கள். அவை மலருக்கு மலர் சென்று தேனை சேகரிக்கும்போது அவைகளின் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம் இன்னொரு பூவில் படும்போதுதான் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் , இதனால் காய் உருவாகும், காய் கனியாகும்.

இதனால் தற்போது ஏற்பட்டுள்ள தேனீக்களின் உயிரிழப்பு பெருமளவில் பழ உற்பத்தியையும் பாதிக்கும் என்னும் அச்சம் உருவாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 12 =

*