தாத்தா என நம்பி விட்ட பெற்றோர்: 4 வயது குழந்தையை சீரழித்த முதியவர்..!!

சென்னையில் தாத்தா என்று நம்பி முதியவரிடம் சென்ற 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் ஜலாபுதீன் இவருக்கு வயது 75. இவர் ஒரு வீட்டின் சொந்தக்காரர். இவரது வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம் வசித்து வந்தது.
இந்த குடும்பத்திற்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அடிக்கடி தாத்தா தாத்தா என்று ஜலாபுதீனிடம் விளையாடும் வழக்கத்தை கொண்டுள்ளது.
இதேபோல நேற்று விளையாட வந்த நிலையில் குழந்தைக்கு ஜலாபுதீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது
அழுது கொண்டே வீட்டுக்கு வந்த குழந்தையிடம் தாயும் தகப்பனும் விசாரித்த நிலையில் குழந்தைக்கு நடந்த விடயங்களை கூற தெரியவில்லை.
அங்கு என்ன நடந்தது என்பதை பெற்றோரிடம் செய்து காட்டி இருக்கிறது குழந்தை. இதன் பின் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள அமைந்த கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜலாபுதீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது ஜலாபுதீனிடம் இது பற்றிய விசாரணை நடந்து வருகிறது